உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மடிப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்

மடிப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்

சென்னை,மடிப்பாக்கம் பிரதான சாலை - மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பில், மெட்ரோ ரயில் பணிகள் நடக்கின்றன. இதனால், இன்றும் நாளையும் மட்டும், சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றப்படுகிறது. கைவேலியில் இருந்து கீழ்க்கட்டளை நோக்கி செல்லும் மாநகரப் பேருந்து மற்றும் இதர வாகனங்கள் அனைத்தும், இடது புறம் திரும்பி, லேக் வியூ சாலையில் இருந்து வலது புறம் திரும்ப வேண்டும்பின் ராஜேந்திரன் நகர் சாலையிலிருந்து மீண்டும் இடது புறம் திரும்பி, மேடவாக்கம் பிரதான சாலை வழியாக, கீழ்க்கட்டளை நோக்கி செல்லலாம் மடிப்பாக்கத்தில் இருந்து கீழ்க்கட்டளை நோக்கி செல்லும் வாகனங்கள், இடது புறம் திரும்பி, சபரி சாலை வழியாக வந்து, வலது புறம் லேக் வியூ சாலையில் செல்ல வேண்டும்பின், ராஜேந்திரன் நகர் சாலையிலிருந்து இடதுபுறம் திரும்பி, மேடவாக்கம் பிரதான சாலை வழியாக கீழ்க்கட்டளை நோக்கி செல்லலாம் கீழ்க்கட்டளையிலிருந்து மடிப்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள், வழக்கம் போல் செல்லலாம்.இத்தகவல், காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !