| ADDED : மே 11, 2024 12:07 AM
குமரன் நகர், மனைவியின் கள்ளக்காதல் தெரியவந்ததை அடுத்து மனம் உடைந்து வியாபாரி குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்துக்கொண்டார்.சென்னை, மேற்கு மாம்பலம், கிருஷ்ணப்பா தெருவை சேர்ந்தவர் மோகன்,50; இவர் இரும்பு வியாபாரி. இவரது மனைவி யமுனா,39. தம்பதிக்கு சுவாதி, 12, தேஜஸ், 5, என இரு பிள்ளைகள் இருந்தனர்.வேலைக்கு சென்று வந்த யமுனாவிற்கு, வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் தெரிந்து, மோகன் யமுனாவை கண்டித்து வந்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை. ஆத்திரமடைந்த மோகன் நேற்று, தற்கொலை செய்து கொள்வதென முடிவு செய்தார். ஆனால், தான் இறந்த பிறகு, குழந்தைகள் கதி என்னவாகும் என மோகன் யோசித்துள்ளார். யமுனா வேலைக்கு சென்றிருந்த நிலையில், மகள் சுவாதியின் கழுத்தை அறுத்தும், மகன் தேஜஸின் கழுத்தை நெரித்தும் கொடூரமாக கொலை செய்துள்ளார். பின், அவர் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலை முடிந்து மாலையில், யமுனா வீட்டிற்கு வந்தபோது, மூவரும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த தகவலின்படி வந்த குமரன் நகர் போலீசார், மூவரின் உடல்களை கைப்பற்றி, யமுனாவிடம் விசாரிக்கின்றனர்.