உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேசிய நெடுஞ்சாலையில் தீக்கிரையான டிரைலர் லாரி

தேசிய நெடுஞ்சாலையில் தீக்கிரையான டிரைலர் லாரி

கும்மிடிப்பூண்டி:சென்னை துறைமுகத்தில் இருந்து இரும்பு தாதுக்கள் ஏற்றி, கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை நோக்கி, நேற்று மாலை டிரைலர் லாரி ஒன்று சென்றது. திருநெல்வேலியைச் சேர்ந்த கணேசன், 58, என்பவர் லாரியை ஓட்டி சென்றார்.சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் கவரைப்பேட்டை அடுத்த சிறுவாபுரி சந்திப்பு அருகே லாரியின் இடதுபுற டயர் ஒன்று வெடித்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர இரும்பு தடுப்புகளை உடைத்து, இணைப்பு சாலையோரம் நின்றது.அப்போது, லாரியின் டீசல் டேங்கில் உடைப்பு ஏற்பட்டு தீப்பற்றியது. அடுத்த சில நிமிடங்களில், லாரி முழுதும் தீப்பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. லாரியும், அதில் இருந்த இரும்பு தாதுக்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின.தகவல் அறிந்த பொன்னேரி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். லாரி டிரைவர் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். தேசிய நெடுஞ்சாலையில், ஓடும் லாரி தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை