உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பஸ் கூரையில் ரகளை: மாணவர்கள் கைது

பஸ் கூரையில் ரகளை: மாணவர்கள் கைது

கீழ்ப்பாக்கம்,பூந்தமல்லியிலிருந்து பிராட்வே செல்லும்,'தடம் எண்: 53' மாநகர பேருந்தின் கூரை மீது, கல்லுாரி மாணவர்கள் கூட்டமாக அமர்ந்து ரகளை செய்யும், 'வீடியோ' நேற்று முன்தினம் வெளியானது.அதில், மாணவர்கள் சாலையை மறித்து, பேருந்தின் முன்புறம் கூட்டமாக நடந்து செல்வதும், சாலையில் பட்டாசுகள் வெடிப்பது போலவும் பதிவாகி இருந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார், 'வீடியோ' காட்சிகளை ஆய்வு செய்ததில், கடந்த 5ம் தேதி பூந்தமல்லி நெடுஞ்சாலையில், அமைந்தகரை - கீழ்ப்பாக்கம் இடையே, இச்சம்பவம் நடந்தது தெரிந்தது.பச்சையப்பன் கல்லுாரியின் முன்னாள் மற்றும் இன்னாள் மாணவர்கள், சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்.புகார் எதுவும் வராததால், வீடியோ காட்சிகளின் அடிப்படையில் அமைந்தகரை, கீழ்ப்பாக்கம் போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட 100 மாணவர்கள் மீது, வழக்குப்பதிவு செய்தனர்.இதையடுத்து, வானகரத்தைச் சேர்ந்த சரவணன், 20, திருவேற்காடைச் சேர்ந்த தங்கமணி, 22, ஆகிய இருவரை, கீழ்ப்பாக்கம் போலீசார் நேற்று கைது செய்து, அவர்களிடம் விசாரிக்கின்றனர்.இதில் சரவணன், பச்சையப்பன் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படிப்பதும், தங்கமணி கடந்த 2023ல், அதே கல்லுாரியில் படிப்பை முடித்திருப்பதும் தெரிந்தது.சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற மாணவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், 'ரூட் தல' விவகாரத்தில் ஈடுபட்ட மாணவர்களின் வீடுகளுக்கே சென்று, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி