உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இடம் மாறி இருந்த சிறுநீரகம் அப்பல்லோவில் நவீன சிகிச்சை 

இடம் மாறி இருந்த சிறுநீரகம் அப்பல்லோவில் நவீன சிகிச்சை 

சென்னை,உடலில் சிறுநீரகம் இடமாறி இருக்கும் 58 வயது நோயாளிக்கு, உலகளவில் முதன் முறையாக உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான ஆர்.டி.என்., சிகிச்சை அப்பல்லோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து, மருத்துவமனையின் முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் ரெபாய் சவுகத் அலி கூறியதாவது:கட்டுப்படுத்த முடியாத உயர் ரத்த அழுத்த பாதிப்புடன், 58 வயது நபர் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனையில் அனுமதித்து பல்வேறு கட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. அந்நோயாளிக்கு இடபக்கம் இருக்க வேண்டிய சிறுநீரகம் வலது பக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும் உடற்கூறு மாறுபாடு இது. அதிநவீன ஆர்.டி.என்., சிகிச்சையின் வாயிலாக உயர் ரத்த அழுத்தம் குறைக்கப்பட்டது. இதுபோன்ற நபர்களுக்கு, உலகளவில் இச்சிகிச்சை முதன் முறையாக அளிக்கப்பட்டது.சிகிச்சை முடிந்த மறுநாளே நோயாளி வீடு திரும்பினார். சிகிச்சைக்கு பின், இரண்டு நாள் வலி இருந்தாலும், அதன்பின் சரியாகிவிட்டது. தற்போது நோயாளி நலமுடன் உள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்