உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தரமணி ரயில் நிலையத்தில் நகர்ப்புற வனம் அமைப்பு

தரமணி ரயில் நிலையத்தில் நகர்ப்புற வனம் அமைப்பு

தரமணி, தரமணி மேம்பால ரயில் நிலையம், முக்கிய சந்திப்பாக உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியில், 5 ஏக்கருக்கு மேல் காலி இடம் உள்ளது.இந்த பகுதியை, பசுமை நிறைந்த பகுதியாக மாற்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், ரயில்வே அனுமதியுடன், மாநகராட்சி முன் முயற்சியில் நகர்புற வனம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு, போர்டு மற்றும் பசுமை சார்ந்து செயல்படும் நிறுவனங்கள் உதவி செய்கின்றன. மொத்த இடத்தில், 1.26 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டது. அதில், 60 வகையான, 12,300 நாட்டு மரக்கன்றுகள் நடப்படுகின்றன.தற்போது, கோடை என்பதால் நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் விட்டு பராமரிக்கப்படுகிறது. பருவமழையின்போது, மரக்கன்றுகள், 2 முதல் 5 அடி வரை வளர்ந்து விடும். அதன்பின், வளர்ச்சி அதிகரித்து பசுமையாக காட்சியளிக்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை