| ADDED : ஜூன் 20, 2024 12:28 AM
அடையாறு, கிண்டி கவர்னர் மாளிகை, தேசிய பூங்கா உள்ளிட்ட பகுதியில் வடியும் மழைநீர், 10 அகலம், 1.5 கி.மீ., நீளம் உடைய ராஜ்பவன் கால்வாய் வழியாக, வேளச்சேரி ஏரியை அடைகிறது.ஏரியில் தண்ணீர் உயரும்போது, கால்வாய் மூழ்கி, ஒட்டியுள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தும். இடைப்பட்ட பகுதியில் துார்வார, 'பாப்காட்' வாகனம் செல்லும் வகையில் சாய்வு பாதை அமைக்கப்பட்டு உள்ளது.அதன் வழியாக வெளியேறும் வெள்ளம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு தெருக்களில் தேங்கும். இந்த கால்வாயை அகலப்படுத்த வேண்டியது அவசியம்.இந்த கால்வாயை ஒட்டி உள்ள வீடுகளில் இருந்து கழிப்பறை கழிவுகள் கால்வாயில் விடப்படுகிறது. குப்பை, மரக்கிளைகளும் சேர்வதால், கால்வாயில் அடைப்பு ஏற்படுகிறது. இதை அகற்ற, சில வீடுகள் இடையூறாக உள்ளன.இன்னும் சிலர், கால்வாயைச் சேர்த்து ஆக்கிரமித்து, வீடுகளை விரிவாக்கம் செய்துள்ளனர். இதனால், கால்வாய் சுருங்கி, நீரோட்டம் தடைபட்டு, சுற்றி உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்படுத்துகிறது.கால்வாயில் விடும் கழிவுநீர் இணைப்பை துண்டித்து, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என, வேளச்சேரி பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.