உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வேளச்சேரி சார் - பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்ய மீண்டும் எதிர்ப்பு

வேளச்சேரி சார் - பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்ய மீண்டும் எதிர்ப்பு

சென்னை, வேளச்சேரி உள்ளிட்ட சார் - பதிவாளர் அலுவலகங்களை அடையாறுக்கு மாற்ற, அப்பகுதி பொதுமக்கள், ஆவண எழுத்தர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னையில் அடையாறு, வேளச்சேரி, நீலாங்கரை பகுதிகளில் தனித்தனி சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களுக்கு, தனித்தனியாக சொந்த கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சென்னை அடையாறில், புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டுவசதி வாரிய அலுவலக வளாகத்துக்கு, அடையாறு, வேளச்சேரி, நீலாங்கரை சார் - பதிவாளர் அலுவலகங்களை மாற்ற பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கு, பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.இது குறித்து வேளச்சேரி ஆவண எழுத்தர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளுக்கானசார் -- பதிவாளர் அலுவலகம், 20 ஆண்டுகளுக்கு மேலாக வேளச்சேரியில் செயல்பட்டு வருகிறது. சென்னையில் அதிக பத்திரங்கள் பதிவாகும் அலுவலகமாக இது உள்ளது.இந்த அலுவலகத்தை அடையாறுக்கு மாற்றுவதால், பொதுமக்கள் நீண்ட தொலைவு பயணிக்கும் நிலை ஏற்படும். இதற்கு மாற்றாக, வேளச்சேரியிலேயே சொந்த கட்டடம் கட்ட, ஒன்பது இடங்களில் மாற்று இடம் தேர்வு செய்து பரிந்துரைத்து இருக்கிறோம்.பதிவுத்துறை அதிகாரிகள் இதை பரிசீலித்தால், இங்கேயே சொந்த கட்டடம் கட்டலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை