மேலும் செய்திகள்
மதுபாட்டில்கள் பதுக்கிய பெண் கைது
03-Oct-2025
குன்றத்துாரில் வாலிபரை வெட்டிய 6 பேர் கைது
03-Oct-2025
சில வரி செய்திகள்
03-Oct-2025
ருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றியவர் கைது
03-Oct-2025
வேப்பேரி: சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில், தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், நேற்று புகார் ஒன்று அளித்தார்.அதில், 'நான் தினமும் காலையில் நடைபயிற்சி செய்யும் செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், யு டியூபர் 'பிரியாணி மேன்' என்ற அபிஷேக் ரபி வீடியோ பதிவிட்டுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தார்.போலீசாரின் விசாரணையில், பெண்களை இழிவுபடுத்தி தரக்குறைவாக கொச்சை வார்த்தைகளுடன் வீடியோ பதிவிட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அபிஷேக் ரபியை, 29,சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.அவர் மீது, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
03-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025