உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகர பேருந்து மோதி திருவேற்காடில் பெண் பலி

மாநகர பேருந்து மோதி திருவேற்காடில் பெண் பலி

திருவேற்காடு, திருவேற்காடு அடுத்த வட நூம்பல், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயா, 58. டைல்ஸ் கடையில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக, திருவேற்காடு, வேலப்பன்சாவடி சாலையில் நடந்து சென்றார். அப்போது, தி. நகரில் இருந்து திருவேற்காடு நோக்கி சென்ற தடம் எண்: 72 மாநகர பேருந்து, வேலப்பன்சாவடி மேம்பாலத்தில் திரும்பும் போது, ஜெயா மீது மோதி விபத்துக்கு உள்ளானது. பேருந்துக்கும், சாலையோர இரும்பு தடுப்புக்கும் இடையே சிக்கிய ஜெயா, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் ஆனந்தன், 48 ; என்பவரை கைது செய்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை