உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு

திருவேற்காடு, திருவேற்காடு அடுத்த கோலடி, தேவி நகரைச் சேர்ந்தவர் சக்திவேல், 23; எலக்ட்ரீஷியன். இவரது மாமா ராமகிருஷ்ணன் அதே பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். அதை புதுப்பிக்கும் பணி நடக்கிறது.இந்த நிலையில், நேற்று மதியம் 12:30 மணி அளவில், சக்திவேல், பேக்கரியின் பெயர் பலகையை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் துாக்கிய பெயர் பலகை, அருகில் இருந்த தெரு விளக்கு மின் இணைப்பில் உரசி, சக்திவேல் மீது மின்சாரம் பாய்ந்தது.இதனால், துாக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை