உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 10 கிலோ குட்கா பறிமுதல் அம்பத்துாரில் ஒருவர் கைது

10 கிலோ குட்கா பறிமுதல் அம்பத்துாரில் ஒருவர் கைது

அம்பத்துார்:அம்பத்துார், ஒரகடம், காந்தி நகரில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக, அம்பத்துார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில், போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த ஞானகுருசாமி, 55, என்பவர், குட்கா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரிந்தது.அவரை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், அவரிடமிருந்த 5 கிலோ ஹான்ஸ், 5 கிலோ புகையிலை, ஒரு கிலோ கூல்லிப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிந்த போலீசார், காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ