மேலும் செய்திகள்
ஸ்டாலின் - பழனிசாமி வருகை ஓங்கப்போவது யார் 'கை?'
05-Aug-2025
சென்னை: சென்னை, சைதாப் பேட்டை தாடண்டர் நகரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 19 மாடி குடியிருப்புகள் உள்ளன. அதையொட்டி, பொதுப் பணித் துறை அடுக்குமாடி குடியிருப்பும் உள்ளது. இந்நிலையில் நேற்றிரவு, 8:00 மணி அளவில், இரு அடுக்குமாடி குடியிருப்புகளிலும் மின்தடை ஏற்பட்டது. இதனால், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின், 'சி' 4, 5, 6 ஆகிய பிளாக்குகளில், லிப்டில் சென்ற 10க்கும் மேற்பட்டோர் சிக்கினர். இதே போல், பொதுப்பணித் துறை குடியிருப்பின், 'சி' 7 பிளாக்கிலும் குழந்தை உட்பட இருவர் லிப்டில் சிக்கினர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், அப்பகுதி மக்களின் உதவியுடன் லிப்டில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. நள்ளிரவு 12:00 மணிக்கு பின், மின் சேவை சீரானது.
05-Aug-2025