குறைதீர் முகாமில் 109 காவலர்கள் மனு
சென்னை, காவலர் குறைதீர் சிறப்பு முகாமில் 109 பேர் மனு அளித்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று, காவலர் குறைதீர் முகாம் நடந்தது. இதில் சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு, ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த மூன்று உதவி கமிஷனர்கள், ஏழு ஆய்வாளர்கள் உட்பட 109 பேர் மனு அளித்தனர். பணி மாறுதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை பெற்ற கூடுதல் கமிஷனர் விஜயேந்திர பிதாரி, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.