உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 14 ஆட்டிசம் குழந்தைகள் கடலில் நீந்தி சாதனை

14 ஆட்டிசம் குழந்தைகள் கடலில் நீந்தி சாதனை

சென்னை, கடலுார் - சென்னை வரை, 165 கி.மீ., துாரம் கடலில் நீந்தி, 14 ஆட்டிசம் குழந்தைகள் புதிய சாதனை படைத்தனர்.யாதவி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், கடல் நீச்சல் பயணம் கடந்த 1ம் தேதி கடலுாரில் துவங்கியது. இதில், 9 - 19 வயதுக்குட்பட்ட 14 மாற்றுத்திறனாளி குழந்தைகள் நான்கு நாட்கள், 165 கி.மீ., நீந்தி, நேற்று முன்தினம் மாலை சென்னை மெரினா கடற்கரைக்கு வந்தடைந்தனர். இந்த சாதனையை, 'ஏசியன் புக் ஆப் ரெகார்ட்' அங்கீகரித்து, சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கியது. நிகழ்வில் பங்கேற்ற, முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் குழந்தைகளை பாராட்டினர்.சைலேந்திர பாபு பேசுகையில், ''ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முன்னிலைப்படுத்தும் விதமாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்துள்ளது. எல்லா குழந்தைகளையும் போல் அவர்களாலும் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ