| ADDED : நவ 25, 2025 05:00 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 12 வயது சிறுமியை சீரழித்தவருக்கு 20 ஆண்டு சிறையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் ஹோமில் தங்கி, 12 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வந்தார். அதில், காவலாளியாக பணியாற்றிய திருவண்ணாமலையைச் சேர்ந்த தேவேந்திரன், 47, என்பவர், கடந்த 2020ம் ஆண்டு அச்சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து விசாரித்த ஆவடி அனைத்து மகளிர் போலீசார், தேவேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், நேற்று நீதிபதி உமாமகேஸ்வரி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேவேந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.