உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 23 கிலோ கஞ்சா கடத்திய 4 வாலிபர்களுக்கு காப்பு

23 கிலோ கஞ்சா கடத்திய 4 வாலிபர்களுக்கு காப்பு

அண்ணா நகர், பெரம்பூர் ரயில் நிலையத்தில், கஞ்சா கடத்தப்படுவதாக, அண்ணா நகர் மதுவிலக்கு போலீசாருக்கு, நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.போலீசார், பெரம்பூர், முரசொலி மாறன் மேம்பாலம் அருகில் கண்காணித்தபோது, ரயில் நிலையத்தில் இருந்து, பெரிய பையுடன் வெளியில் வந்த இருவரை மடக்கி பிடித்தனர்.அதை சோதித்ததில், 10 பார்சலில், 13 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில், நாமக்கல், குமாரபாளையத்தை சேர்ந்த விஜயகுமார், 28, அவரது நண்பரான ஈரோட்டை சேர்ந்த வசந்தகுமார், 27, ஆகிய இருவரும், ஓடிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி, சென்னை வழியாக நாமக்கல்லுக்கு கடத்த முயன்றது தெரிந்தது.அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில், முதல் முறையாக கஞ்சா கடத்தியது தெரிந்தது. அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், நேற்று காலை அவர்களை சிறையில் அடைத்தனர்.

பெசன்ட் நகர்

பெசன்ட் நகர் கடற்கரையில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின்படி, அடையாறு போலீசார் விசாரித்தனர்.அதில், திருவெற்றியூரை சேர்ந்த முஸ்தபா, 34, கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கிஷோர், 24, ஆகியோர், 10 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை