உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 23 சவரன் திருடியவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

23 சவரன் திருடியவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

சென்னை, அரும்பாக்கம், சக்தி நகர், திருபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 44. பூட்டிக்கிடந்த இவரது வீட்டில், 2017 ஆகஸ்டில், மர்ம நபர்கள், 23 சவரன் நகை திருடி தப்பினர்.இது குறித்து அரும்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, புளியந்தோப்பு, திரு.வி.க., நகரைச் சேர்ந்த ரஹமதுல்லா, 40, என்பவரை கைது செய்தனர்.இவரிடம் இருந்து, 13 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணை, எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தகுந்த சாட்சியங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ரஹமதுல்லாவுக்கு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 4,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை