மேலும் செய்திகள்
மழைநீர் கால்வாய் பணியை தீவிரப்படுத்த வேண்டுகோள்
04-Oct-2024
சென்னை, சென்னை மாநகராட்சி எல்லைக்குள் நீர்வளத்துறையின் கீழ், 31 கால்வாய்கள் உள்ளன. பருவமழை காலத்தின்போது முறையாக துார்வாரி சீரமைக்காததால், வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதற்காக, கால்வாய் நீரை வெளியேற்றவும், சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தவிர்க்கவும், கால்வாய் துார்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என, நீர்வளத்துறையிடம், மாநகராட்சி கோரிக்கை வைத்து காத்திருந்தது.ஆனால், கால்வாய் பராமரிப்பில் தாமதம் நிலவியதால், விருகம்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய், வீராங்கல் கால்வாய்களை, தங்களிடம் ஒப்படைக்குமாறு, சென்னை மாநகராட்சி கோரிக்கை வைத்தது. இதையேற்று, மூன்று கால்வாய்களையும் மாநகராட்சியிடம் ஒப்படைத்து, அதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை முடிந்தபின், நிதி ஒதுக்கி துார்வாரும் பணி துவங்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
04-Oct-2024