மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி
11-Jan-2025
கொருக்குப்பேட்டை, சென்னை, கொருக்குப்பேட்டையில், ஒரே குடியிருப்பு வீடுகளில் வசித்து வந்த 7 - 16 வயது சிறுமிகள் ஐந்து பேர், வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவில் விளையாடி விட்டு வருவதாக வீட்டில் தெரிவித்து விட்டு சென்றார். வெகுநேரமாகியும் சிறுமியர் திரும்பி வரவில்லை. பின், மூன்று குடும்பத்தினரும் பல இடங்களில் தேடியும் சிறுமியர் கிடைக்கவில்லை. அதிகாலை 2:00 மணிக்கு பிறகும் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர், அதிகாலை 4:00 மணியளவில் கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று காலையில் அதே பகுதியில் சுற்றி திரிந்த ஐந்து சிறுமியரை கண்டுபிடித்தனர். சிறுமியரிடம் நடத்திய விசாரணையில், பூங்காவில் விளையாடிய பின், அதே பகுதியில் ஐந்து பேரும் சுற்றி திரிந்து விட்டு வீடு திரும்பி வந்தது தெரியவந்தது. திடீரென ஐந்து சிறுமியர் காணாமல் போன சம்பவத்தில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
11-Jan-2025