உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 6 கிலோ கஞ்சா பறிமுதல்

6 கிலோ கஞ்சா பறிமுதல்

6 கிலோ கஞ்சா பறிமுதல்

6 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் இருந்து எழும்பூர் வழியாக, புதுச்சேரிக்கு இயக்கப்படும், 'சர்க்கார்' விரைவு ரயில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு, நேற்று காலை வந்தது. ரயிலின் முன்பக்க பொது பெட்டியில், கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அந்த பையை உரிமை கோரி யாரும் முன் வரவில்லை.இதையடுத்து, அந்த பையை திறந்து பார்த்தபோது, அதில் 6 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதன் மதிப்பு 1.20 லட்சம் ரூபாய்.இந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து இருக்கலாம் என தெரிவித்தனர். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை