8 பேருந்து சேவை துவக்கி வைப்பு
8 பேருந்து சேவை துவக்கி வைப்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், புதிய பேருந்துகள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி, தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில், நேற்று மாலை நடந்தது. இதில், தாம்பரம் - பெங்களூரு, மதுராந்தகம் - செய்யூர், செங்கல்பட்டு - தாம்பரம், செங்கல்பட்டு - மாமல்லபுரம், செங்கல்பட்டு - திருப்பதி, தாம்பரம் - மண்ணிவாக்கம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் எட்டு பேருந்துகளை, அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார்.