உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.88 லட்சம் மோசடி பெண் கைது

ரூ.88 லட்சம் மோசடி பெண் கைது

வேளச்சேரி:வேளச்சேரி, லட்சுமி நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வீரசேகரன், 57. இவர், செடிகள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2007ம் ஆண்டு, இந்த நிறுவனத்தில், குரோம்பேட்டையை சேர்ந்த நித்யா, 40, என்பவர் வேலைக்கு சேர்ந்தார். ஊழியர்கள் தேர்வு, ஊதியம், வரவு - செலவு உள்ளிட்ட மொத்த கணக்குகளை நிர்வகித்து வந்தார். கடந்த 2023ம் ஆண்டு, நித்யா வேலையில் இருந்து திடீரென நின்றார். சில மாதங்களுக்கு முன், வரவு செலவை சரி பார்த்தபோது, 88 லட்சம் ரூபாயை, நித்யா மோசடி செய்தது தெரிந்தது.வீரசேகரன் அளித்த புகாரின்படி, வேளச்சேரி போலீசார், நேற்று நித்யாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை