மேலும் செய்திகள்
அதிகாரிகளே... பாரபட்சம் வேண்டாம்!
29-May-2025
சென்னை, தி.நகரில் நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்களை வைத்து விற்பனை செய்த ஒன்பது வியாபாரிகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள், 20,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.தி.நகரில் அமைக்கப்பட்ட நடைபாதைகளை ஆக்கிரமித்து, வியாபாரிகள் தங்கள் பொருட்களை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால், பாதசாரிகள் நெரிசலில் சிக்குவதோடு, விபத்து ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது.இதுகுறித்து, ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து, தி.நகர் வடக்கு உஸ்மான் சாலை, தியாகராயா சாலைகளில், மாநகராட்சியினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, நடைபாதையை ஆக்கிரமித்து விற்பனை பொருட்கள் வைத்திருந்த, ஒன்பது கடைகளின் உரிமையாளர்களுக்கு, 20,000 ரூபாய் அபராதம் விதித்தனர். அதிகபட்சம், 3,000 ரூபாய், குறைந்த பட்சம், 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும், ஆக்கிரமிப்பு தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என,மாநகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளை எச்சரித்துள்ளனர்.
29-May-2025