உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையோர மழைநீரில் மிதந்த ஆண் சடலம்

சாலையோர மழைநீரில் மிதந்த ஆண் சடலம்

ஆவடி, டஆவடியை அடுத்த பட்டாபிராம், கோபாலபுரம், ஆறாவது பிரதான சாலையோரம் தேங்கியிருந்த தண்ணீரில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக, நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.பட்டாபிராம் போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தபோது, மதுபோதையில் தள்ளாடியபடி வந்த அந்த நபர், திடீரென சாலையோரத்தில் தேங்கிய மழை நீரில் விழுந்து கிடந்தது தெரிந்தது. இறந்தவர் யார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை