ஹோட்டலில் அடாவடி ரவுடி கைது
அயனாவரம்அயனாவரம், பி.இ., கோவில் பிரதான தெருவைச் சேர்ந்தவர் ஆண்டனி அகஸ்டின், 48.அதே பகுதியில், இவர் நடத்தும் துரித உணவகத்திற்கு, கடந்த மாதம் 27ம் தேதி இரவு வந்தவர், 'ப்ரைட் ரைஸ்' சாப்பிட்டு, பணம் தரவில்லை.மேலும், தான் பெரிய ரவுடி எனக்கூறி, ஆண்டனி அகஸ்டினை தாக்கி, கல்லா பேட்டியில் இருந்த 1,000 ரூபாயை எடுத்து தப்பினார்.அயனாவரம் போலீசார் விசாரித்து, அம்பத்துார், எஸ்டேட் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பழைய குற்றவாளியான வண்டு சிவா என்ற சிவாவை, 22, கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.