உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி

நீலாங்கரை, திருவான்மியூர், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் தினேஷ், 18. நேற்று, ஆக்டிவா இருசக்கர வாகனத்தில், திருவான்மியூரில் இருந்து நீலாங்கரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.ஈஞ்சம்பாக்கம் அருகில் செல்லும்போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பஸ் நிறுத்தம் கம்பியில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தினேஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்