உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓசி செருப்பு தராத ஆத்திரம் கடைக்காரரை தாக்கிய வாலிபர் 

ஓசி செருப்பு தராத ஆத்திரம் கடைக்காரரை தாக்கிய வாலிபர் 

ஆவடி, அம்பத்துார், சோழம்பேடு சாலையைச் சேர்ந்தவர் அன்சாரி, 30. இவர், கடந்த 10 ஆண்டுகளாக, ஆவடி கோவர்த்தனகிரியில் 'டீலக்ஸ் புட் வேர்' என்ற பெயரில், காலணி விற்கும் கடை நடத்தி வருகிறார்.கடந்த 11ம் தேதி மதியம், ஆவடி கோவர்த்தனகிரி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், 400 ரூபாய்க்கு செருப்பு வாங்கியுள்ளார். அன்சாரி, செருப்புக்கு பணம் கேட்டபோது, 'என் ஏரியாவில் கடை வைத்து கொண்டு, என்னிடமே பணம் கேட்கும் அளவுக்கு நீ பெரிய ஆளா' எனக் கேட்டு, தகாத வார்த்தைகளால் பேசி, தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பணம் தராததால், அன்சாரி, செருப்பை திரும்ப வாங்கி கொண்டார். அப்போது இருதரப்புக்கும் இடையே கைகலப்பானது. அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, ஓசியில் செருப்பு கேட்ட நபரின் மகன் பிரபு என்பவர், மதுபோதையில் கடைக்கு சென்று அன்சாரியை தாக்கி, கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி உள்ளார்.சம்பவம் நடந்ததற்கான 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவு, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி