உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில கோ-கோ போட்டிக்கு ஆவிச்சி பள்ளி அணி தேர்வு

மாநில கோ-கோ போட்டிக்கு ஆவிச்சி பள்ளி அணி தேர்வு

சென்னை :தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில், தென் சென்னை வருவாய் மாவட்ட அளவிலான கோ--கோ போட்டிகள், செனாய் நகர், செயின் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. ஆண்களுக்கான 17 வயதினர் பிரிவில், 10க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் பங்கேற்றன.விருகம்பாக்கம் ஆவிச்சி பள்ளி அணி, வேலம்மாள் மெட்ரிக் பள்ளி அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த இறுதி ஆட்டத்தில், ஆவிச்சி பள்ளி வீரர்கள் இறுதியில், 16- - 10 என்ற புள்ளி கணக்கில், வேலம்மாள் பள்ளி அணியை வீழ்த்தினர்.இதன் வாயிலாக, தொடர்ந்து 25வது ஆண்டாக, மாநில அளவிலான கோ-கோ போட்டியில் பங்கேற்க, ஆவிச்சி பள்ளி அணி தேர்வானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை