உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளிக்கரணையில் அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

பள்ளிக்கரணையில் அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

பள்ளிக்கரணை,பள்ளிக்கரணையில், சோழிங்கநல்லுார் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள், மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என, சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.,வினர், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தவிர, தமிழக அரசின் குடிநீர் கட்டணம், சொத்து வரி, மின் கட்டண உயர்வை கண்டித்தும், தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும், ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., கந்தன் முன்னிலை வகிக்க, கட்சி உறுப்பினர்கள் உட்பட, 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை