உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விஷஜந்து கடித்து சிறுவன்  மருத்துவமனையில் அட்மிட் 

விஷஜந்து கடித்து சிறுவன்  மருத்துவமனையில் அட்மிட் 

திருநின்றவூர்: திருநின்றவூர், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகுந்தன், 38 ; பெயிண்டர். அவரது மகன் தருண், 13 ; திருநின்றவூர், கோமதிபுரம் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் தருண் நண்பர்களுடன், கழிவறைக்கு சென்றபோது, புதர்களில் பதுங்கி இருந்த விஷஜந்து ஒன்று உள்ளங்காலில் கடித்துள்ளது. வலியால் துடித்த தருணை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர மருத்துவ கண்காணிப்பில் தருண், சிகிச்சை பெற்று வருகிறார். திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி