உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவின் பால் அட்டை புதுப்பிக்க ஏற்பாடு

ஆவின் பால் அட்டை புதுப்பிக்க ஏற்பாடு

கொளத்துார், சர்வர் பிரச்னையால், ஆவின் மாதாந்திர அட்டைகளை பணம் கட்டி அப்டேட் செய்ய முடியாமல், வாடிக்கையாளர்கள் அலைக்கழிப்புக்கு உள்ளாயினர்.இது குறித்து, அயனாவரத்தில் உள்ள ஆவின் அலுவலகத்தில் கேட்டாலும் முறையான பதில் இல்லை. இதனால் விலை குறைப்பு சலுகையை குறைக்க, ஆவின் நிர்வாகம் திட்டமிடுகிறதா என்ற கேள்வி எழுந்தது.இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இந்த நிலையில், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு அந்தந்த பால் பூத்களிலேயே, ஆவின் பால் வாங்கும் மாதாந்திர அட்டைதாரர்கள் அட்டைகளை புதுப்பித்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.கொளத்துார் பகுதியில் பூம்புகார் நகரில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை