தி.நகரில் பார்க்கிங் 5 இடங்களில் ஏற்பாடு
சென்னை: தி.நகரில் புத்தாடை வாங்க வருவோர் பயனடைய, 5 இடங்களில் 'பார்க்கிங்' வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தணிகாசலம் சாலை சந்திப்பில் உள்ள பன்னடுக்கு தானியங்கி வாகன நிறுத்தம், அன்பழகன் மேம்பாலத்தின் கீழ் பகுதி, பிரகாசம் சாலை மாநகராட்சி பள்ளி, தண்டபாணி தெரு ராமகிருஷ்ணா பள்ளி, சோமசுந்தரம் மைதானம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இங்கெல்லாம் வாகனங்கள் நிறுத்தலாம் * தியாகராய சாலை, தணிகாசலம் சாலை சந்திப்பில் உள்ள பன்னடுக்கு தானியங்கி வாகன நிறுத்தம் * அன்பழகன் மேம்பாலத்தின் கீழ் பகுதி * பிரகாசம் சாலை மாநகராட்சி பள்ளி * தண்டபாணி தெரு ராமகிருஷ்ணா பள்ளி * சோமசுந்தரம் மைதானம்