உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உறவினரின் வீட்டில் திருடியோர் கைது

உறவினரின் வீட்டில் திருடியோர் கைது

வடக்கு கடற்கரை, சென்னை, 3வது கடற்கரை சாலையைச் சேர்ந்தவர் சந்திரமோகன், 31. இவர், கடந்த 30ம் தேதி வெளியூருக்கு சென்று விட்டு, 1ம் தேதி வீடு திரும்பி உள்ளார். அப்போது, பீரோவில் இருந்த இரண்டரை சவரன் நகைகளை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.வடக்கு கடற்கரை போலீசாரின் விசாரணையில், சந்திரமோகனின் உறவினர்களான கிளைவ் பேட்டரி, 4வது லைன் பீச் ரோட்டைச் சேர்ந்த விஜயகாந்த், 40, மணிமாறன், 22, ஆகியோர், வீடு புகுந்து திருடியது தெரியவந்தது.மேலும், சந்திரமோகன் வீட்டின் சாவியை ஜன்னல் அருகே மறைத்து வைத்து செல்வது தெரிந்து, இருவரும் வீட்டை திறந்து பீரோவை உடைத்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 5 கிராம் தங்க நகை மீட்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை