உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வக்கீல் தம்பதியின் வீடு புகுந்து 40 சவரன் திருடியவர் கைது

வக்கீல் தம்பதியின் வீடு புகுந்து 40 சவரன் திருடியவர் கைது

திருவொற்றியூர், திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார், 39. இவரது மனைவி செண்பகஸ்ரீ, 34. இருவரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்.கடந்த 14ம் தேதி, இவர்களது வீட்டில் 40 சவரன் நகைகள், 50,000 ரூபாய் திருட்டு போனது. இது குறித்து, திருவொற்றியூர் போலீசார் விசாரித்தனர். இதில், ஆலந்துாரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், 30, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.திருவல்லிக்கேணியில் வீடு ஒன்றில் பதுங்கி இருந்த, பாலகிருஷ்ணனை, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.விசாரணையில் தெரிய வந்ததாவது:கடந்த 13ம் தேதி இரவு, இரு நண்பர்களுடன் சேர்ந்து, திருவொற்றியூர் பகுதியில் மது அருந்திய பாலகிருஷ்ணன், எல்லையம்மன் கோவில் கடற்கரையில் உறங்கியுள்ளார்.மறுநாள் காலையில், எல்லையம்மன் கோவில் பகுதியில் பைக்கில் சுற்றித்திரிந்த பாலகிருஷ்ணன், வழக்கறிஞர் தம்பதி வீட்டில் நோட்டமிட்டு கொள்ளையடித்து உள்ளார். அந்த நகைகளை, தண்டையார்பேட்டை, பாரத் திரையரங்கம் அருகேயுள்ள மாநகராட்சி கட்டடத்தில் மறைத்து வைத்து விட்டு, நண்பர்கள் ஆறு பேருடன் சேர்ந்து, திரு.வி.க.நகரில், பெண்கள் சிலருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இவ்வாறு பேலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். தண்டையார்பேட்டையில், பதுக்கி வைத்திருந்த 38 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார், பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை