உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ. 5 கோடி சொத்தை அபகரிக்க முயற்சி: மேலும் ஒருவர் கைது

ரூ. 5 கோடி சொத்தை அபகரிக்க முயற்சி: மேலும் ஒருவர் கைது

சென்னை,பெங்களூரில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த், 57. அவருக்கு, சென்னை மடிப்பாக்கத்தில், ஐந்து கோடி மதிப்பிலான, 6,083 சதுர அடி வீடுடன் கூடிய சொத்து உள்ளது.அவற்றை போலி ஆவணம் தயாரித்து சிலர் அபகரிக்க முயன்றதாக ஸ்ரீகாந்த், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்து இருந்தார்.போலீசார் விசாரித்து, சொத்தை அபகரிக்க முயன்ற ரவிராஜ், 65 என்பவரை, மே 22ல் கைது செய்தனர். வழக்கில் தலைமறைவாக இருந்த, திருவொற்றியூரைச் சேர்ந்த அலெக்சாண்டர், 56 என்பவரை, நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி