உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏரியில் குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை

ஏரியில் குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை

புழல்: புழல் லஷ்மிபுரம், சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் நித்யானந்தம், 38; ஆட்டோ ஓட்டுனர். கடன் தொல்லையால், குடி பழக்கத்திற்கு அடிமையானதால், தம்பதிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டருகே உள்ள ரெட்டை ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள், ஏரியில் சடலம் மிதப்பதாக போலீசில் புகார் அளித்தனர். மாதவரம் தீயணைப்பு துறையினர், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை