உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தினம் ஒரு வண்ணத்தில் பெட் ஷீட்

ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தினம் ஒரு வண்ணத்தில் பெட் ஷீட்

சென்னை, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், 42 துறைகள் உள்ளன. இவற்றில், 977 டாக்டர்கள், 1,552 நர்ஸ்கள் பணியாற்றும் நிலையில், 3,150 படுக்கை வசதிகள் உள்ளன. இத்துடன், தினமும் 15,000 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.உள்நோயாளிகளின் சிகிச்சை பிரிவை மேம்படுத்தும் வகையில், 65 லட்சம் ரூபாய் மதிப்பில், தினமும் ஒவ்வொரு வண்ணத்தில் படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் பயன்படுத்தப்பட உள்ளன. அதன்படி, இளஞ்சிவப்பு, கருநீலம், கருஞ்சிவப்பு, ஊதா, பச்சை, வெளிர் நீலம் ஆகிய நிறங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.இந்த ஆறு வண்ணங்களில், 3,800 விரிப்புகள், தலையணை உறைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.ஜன., 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ