உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பை பெற்றோர் கற்றுத்தர வேண்டும் பா.ஜ., தலைவர் அண்ணாமலை விருப்பம்

குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பை பெற்றோர் கற்றுத்தர வேண்டும் பா.ஜ., தலைவர் அண்ணாமலை விருப்பம்

சென்னை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், 'பபாசி' சார்பில், 48வது புத்தகக் காட்சி, சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், நடந்து வருகிறது.இதில், 'தினமலர்' நாளிதழ், வரிசை எண்: 45, 46ல் அமைக்கப்பட்டுள்ள தாமரை பிரதர்ஸ் பதிப்பக அரங்கத்திற்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நேற்று வருகை தந்தார்.எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய 'செல்வங்களை அள்ளித்தரும் சித்தர் தரிசனம்' என்ற புத்தகத்தை, கடையம் செண்பகராமன் வெளியிட, எழுத்தாளர் ராம்தங்கம் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், அவர் பங்கேற்றார்.பின், அரங்கில் இருந்த வாசகர்களிடம் புத்தகங்கள் பற்றி உரையாடிய பின், தாமரை பிரதர்ஸ் வெளியிட்ட 'கோளறு பதிகம், செல்வங்களை அள்ளித்தரும் சித்தர் தரிசனம், இறை இடம் இவர், ரத்தத்தின் ரத்தமே' ஆகிய புத்தகங்களை, பணம் செலுத்தி வாங்கிச் சென்றார்.புத்தகக் காட்சிக்கு வந்திருந்த பள்ளி மாணவர்கள், அண்ணாமலையுடன் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். வாசகர்கள், தாங்கள் வாங்கிய புத்தகங்களின் முகப்பில் அவரிடம் கையெழுத்து பெற்றனர்.பின், நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:புத்தக வாசிப்பு, வாழ்க்கைக்கு மிக அவசியம். புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுடன் புத்தகக் காட்சிக்கு வரவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.புத்தக காட்சியில் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் சுற்றி, 200 அரங்குகளை அண்ணாமலை பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி