கோர்ட் உத்தரவால் கடையை காலி செய்தார் பா.ஜ., பிரமுகர்
மூவரசம்பட்டு, நீதிமன்ற உத்தரவை அடுத்து, வாடகை கடையை உரிமையாளரிடம் பா.ஜ., பிரமுகர் ஒப்படைத்தார். மூவரசம்பட்டு, கண்ணன் நகரைச் சேர்ந்தவர் குமார், 53. இவரது வீட்டின் கீழ் தளத்தில் உள்ள இரண்டு கடைகளை, எட்டு ஆண்டுகளுக்கு முன், பா.ஜ., முன்னாள் மாவட்ட செயலர் சுப்பையா, 44, என்பவருக்கு, 'ஸ்டேஷனரி' கடை நடத்த வாடகைக்கு விட்டுள்ளார். கடந்த 2023ல், குமார் தன் சொந்த தேவைக்காக, கடையை காலி செய்து தரும்படி சுப்பையாவிடம் கூறியுள்ளார். ஆனால், சுப்பையா மறுத்ததுடன், வாடகையும் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால், குமாருக்கு 12 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நீதிமன்றம் உத்தரவை அடுத்து, சுப்பையா நேற்று கடைகளை காலி செய்து கொடுத்தார்.