மேலும் செய்திகள்
வாலிபால் போட்டி இன்று நடப்பதாக அறிவிப்பு
22-Oct-2024
சென்னை, தமிழகத்தில் முதல் முறையாக, 'பிளேஸ் வாலிபால் லீக்' முதலாவது சீசன் போட்டி, சென்னையில் பல்வேறு பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.இந்த சீசனில் செயின்ட் பீட்ஸ், செயின்ட் மேரீஸ், மான்போர்ட்டு, டான்பாஸ்கோ,- கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ., -சேது பாஸ்கரா, செயின்ட் பீட்டர்ஸ் என, எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன.'லீக்' முறையில், ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு பள்ளிகளில், போட்டிகள் நடக்கின்றன. தொடர் மழையால் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள், நேற்று சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி வளாகத்தில் நடந்தன.இதில், செயின்ட் பீட்ஸ் மற்றும் அம்பத்துார் சேது பாஸ்கரா பள்ளி அணிகள் மோதின. விறுவிறுப்பான ஆட்டத்தில், 22 - 25, 25 - 23, 25 - 21 என்ற கணக்கில், செயின்ட் பீட்ஸ் பள்ளி அணி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி அணி, 25 - 24, 23 - 25, 25 - 17 என்ற கணக்கில், செயின்ட் பீட்ஸ் அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
22-Oct-2024