உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ப்ளூ ஸ்கை கிரிக்கெட் போட்டி :பத்ம சாரங்கபாணி கிளப் வெற்றி

 ப்ளூ ஸ்கை கிரிக்கெட் போட்டி :பத்ம சாரங்கபாணி கிளப் வெற்றி

சென்னை: ப்ளூ ஸ்கை கிரிக்கெட் போட்டியில், பத்ம சாரங்கபாணி சி.ஏ., அணி, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ப்ளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமியின், லீக் கம் நாக் அவுட் கிரிக்கெட் போட்டி, சேத்துப் பட்டில் நடந்து வருகிறது. ஒன்பது அணிகள் தலா எட்டு லீக் போட்டிகள் வீதம் மோதி வருகின்றன. இதில், இரு நாட்களுக்கு முன் நடந்த போட்டியில் பத்ம சாரங்கபாணி சி.ஏ., அணி மற்றும் ஸ்கார்பியன் சி.சி., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஸ்கார்பியன் சி.சி., அணி, முதலில் பேட் செய்தது. பத்ம சாரங்கபாணி அணியின் துல்லியமான பந்துவீச்சு தாக்குதலால், 22.3 ஓவர்களில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பந்துவீச்சாளர் பாலாஜி, ஹாட்ரிக் உட்பட நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் திருப்புமுனையாக திகழ்ந்தார். இலக்கை நோக்கி களம் இறங்கிய பத்ம சாரங்கபாணி சி.ஏ., அணியின் துவக்க ஆட்டக்காரர், கபில் அஷ்வா அதிரடியாக விளையாடி 70 பந்துகளில் 6 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் என, 98 ரன்கள் குவித்து, அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில், பத்ம சாரங்கபாணி சி.ஏ., அணி 24.4 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை சேர்த்து, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ