உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மண்ணை கவ்வ காத்திருக்கும் மின்மாற்றி சீரமைப்பில் வாரிய அதிகாரிகள் மெத்தனம்

மண்ணை கவ்வ காத்திருக்கும் மின்மாற்றி சீரமைப்பில் வாரிய அதிகாரிகள் மெத்தனம்

திருவொற்றியூர், ஜன. 30-எர்ணாவூர், முல்லை நகர் சந்திப்பில், இரு மின் மாற்றிகளை, நான்கு மின் கம்பங்கள் தாங்கி நிற்கின்றன. முறையான பராமரிப்பு இல்லாததால், மின் கம்பத்தின் மீது செடி, கொடிகள் படர்ந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது.இந்நிலையில், மின் கம்பங்கள் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டதால், கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து, எலும்பு கூடாக காட்சியளிக்கிறது.மழை காலங்களில், இந்த மின்கம்பங்களிலேயே மின்சாரம் பாயும் அளவிற்கு உள்ளதால், மின் ஊழியர்கள் பழுது பார்ப்பு பணியை மேற்கொள்வதில் பெரும் சிக்கல் உள்ளது.இது குறித்து, மின்வாரிய உயரதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தால், கண்டுகொள்ளாமல் மெத்தனம் காட்டி வருகின்றனர் என, அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, மண்ணை கவ்வ காத்திருக்கும் மின்மாற்றியை தாங்கியிருக்கும் மின் கம்பங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை