மேலும் செய்திகள்
தொழிலாளி கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள்
01-Oct-2024
உத்திரமேரூர், அஉத்திரமேரூர் ஒன்றியம், ஒட்டந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 35; இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.இவர், மாங்கல் பகுதி சிப்காட் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 27ம் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.அன்று இரவு 11:00 மணி அளவில், உத்திரமேரூர் அடுத்த காட்டுப்பாக்கம் சாலையில், இறந்த நிலையில் முருகனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் முருகன் இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.எனினும், அவரது மனைவி பாக்கியலட்சுமி தன் கணவர் முருகனுக்கு விரோதிகள் உள்ளதாகவும், இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என, புகார் அளித்தார்.இதையடுத்து, போலீசார் முருகனின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்கு மாற்றம் செய்தனர். எனினும், அவரது குடும்பத்தினர் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்த கோரி, எட்டு நாட்களாக முருகனின் உடலை பெறாமல் இருந்தனர். இந்நிலையில், முருகனின் பெரியப்பா மகனான விஜயன், 36, என்பவருக்கும், முருகனுக்கும் சொத்துப் பிரச்னை தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக தெரிய வந்தது. விஜயனை கைது செய்து போலீசார் கிடுக்குபிடி விசாரணை செய்தனர். விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வேலியநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தபாபு என்பவருடன் விஜயன் தொடர்பு கொண்டு, கூலிப்படையை ஏவி, முருகனை கொலை செய்தது தெரியவந்துள்ளது.இதையடுத்து, முருகனின் சந்தேக மரண வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்தனர். முருகனின் உடலை மனைவி பாக்கியலட்சுமி மற்றும் குடும்பத்தினரிடம் நேற்று மாலை போலீசார் ஒப்படைத்தனர். போலீசார், விஜயனிடம் கொலையாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
01-Oct-2024