உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடலோர காவல் படை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

கடலோர காவல் படை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, சென்னை, நேப்பியர் பாலம் அருகே உள்ள இந்திய கடலோர காவல் படை அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் காலை, 5:45 மணியளவில், இ-மெயில் ஒன்று வந்துள்ளது. அதில், கடலோர காவல்படை அலுவலகத்திற்கும், கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வீட்டிற்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்ட இருந்தது. மிரட்டல் விடுத்த நபரின் இ-மெயில் முகவரியை வைத்து, அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர். தற்போது, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி சேலத்தில் இருப்பதால், இங்குள்ள வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் யாரும் சேதனை மேற்கொள்ளவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !