உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வக்கீலை தாக்கி பணம் பறித்த சிறுவன் கைது

வக்கீலை தாக்கி பணம் பறித்த சிறுவன் கைது

சென்னை, முகப்பேர், கோல்டன் காலனியைச் சேர்ந்தவர் டாவின்சி கிருஷ்ணா, 29 ; வழக்கறிஞர். கடந்த, 13ம் தேதி அதிகாலை அண்ணாசாலை ரஹேஜா டவர்ஸ் வழியாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற ஐந்து பேர், அவரது வாகனத்தை உரசுவது போலச் சென்றுள்ளனர். உடனே வழக்கறிஞர் சத்தம் போட்டுள்ளார். இதனால் அத்திரம் அடைந்தவர்கள், வழக்கறிஞரிடம் தகராறு செய்ததோடு, அவரை தாக்கி, 10,800 ரூபாயை பறித்துச் சென்றனர். காயமடைந்த வழக்கறிஞர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பணம் பறித்த கும்பலில், 17 வயது சிறுவனை கைது செய்தனர். அவர் உபயோகப்படுத்திய கே.டி.எம்.,பைக்கையும் பறிமுதல் செய்தனர்.தலைமறைவாக உள்ளவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை