உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாட்டி மீது டிவி ரிமோட் வீசிய தங்கையை வெட்டிய அண்ணன்

பாட்டி மீது டிவி ரிமோட் வீசிய தங்கையை வெட்டிய அண்ணன்

அயனாவரம் அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, நேற்று அதிகாலை 1:00 மணி வரை, மொட்டை மாடியில் ஆண் நண்பருடன் மொபைல் போனில் பேசி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.வீட்டிற்கு வந்த சிறுமியை, அவரது தாய் திட்டியதாக தெரிகிறது. ஆத்திரமடைந்த சிறுமி, வீட்டிலிருந்த 'டிவி ரிமோட்'டை துாக்கி பாட்டி மீது வீசியதாக தெரிகிறது.இதனால் கோபமடைந்த சிறுமியின் அண்ணனான 17 வயது சிறுவன், சிறுமியின் தலைமுடியை பிடித்து தாக்கியுள்ளார். பின் வீட்டில் இருந்த 1 அடி நீளம் உடைய கத்தியால், சிறுமியின் தலை மற்றும் இடது உள்ளங்கையில் தாக்கியதில் காயமடைந்தார்.நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிறுமி சிகிச்சை பெற்றார். சம்பவம் அறிந்து வந்த அயனாவரம் போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்தபோது, ஏற்கனவே தலைமைச் செயலகம் மற்றும் அயனாவரம் பகுதியில் வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. நேற்று மாலை சிறுவனை போலீசார் கைது செய்து, கெல்லீஸில் உள்ள சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ