உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பஸ் ஓட்டுநர் - வியாபாரி மோதல் பிராட்வேயில் முடங்கிய போக்குவரத்து

பஸ் ஓட்டுநர் - வியாபாரி மோதல் பிராட்வேயில் முடங்கிய போக்குவரத்து

பூக்கடை, பிராட்வேயில், மாநகர பேருந்து ஓட்டுனர், தள்ளுவண்டி கடைக்காரர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து, கோயம்பேடு செல்லும் தடம் எண்: 15எப் மாநகர பேருந்தை, ஓட்டுநர் சுரேஷ் இயக்கிச் சென்றார். நேற்று மாலை, பேருந்து நிலையத்தை விட்டு வெளியே செல்லும்போது, இடையூறாக நின்ற தள்ளுவண்டிகடைக்காரரை தள்ளி போக சொல்லியுள்ளார். இதில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஆதரவாக போக்குவரத்து ஊழியர்கள், தள்ளுவண்டிக்காரரான யுவராஜை, 40, கண்டித்துள்ளனர். இதில், யுவராஜ் நடத்துனர் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஓட்டுனர்கள், பேருந்துகளை இயக்காமல் ஆங்காங்கே நிறுத்தினர். இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணியர் அவதிக்குள்ளாகினர். எஸ்பிளனேடு போலீசார் அவர்களை சாமாதானம் செய்தனர். அப்போது, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். தாக்குதலில் ஈடுபட்டவரை கைது செய்ய வேண்டும் என, ஓட்டுனர்கள் வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து, தள்ளுவண்டி கடைகள் அகற்றப்பட்டன. அதன் பின், போக்குவரத்து சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை