உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிசையில் தீ தச்சர் பலி

குடிசையில் தீ தச்சர் பலி

மேடவாக்கம், மேடவாக்கம், அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம், 70. தனியாக வசிக்கும் தச்சுத் தொழிலாளி.நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் அவரது வீட்டின் கூரையில் புகை வந்தது. அக்கம் பக்கத்தினர் வீட்டினுள் சென்று பார்த்தபோது, தீயில் கருகிய நிலையில் ராஜமாணிக்கம் இறந்து கிடந்தார்.பள்ளிக்கரணை போலீசாரின் விசாரணையில், ராஜமாணிக்கம் பீடியை அணைக்காமல் வீட்டினுள் போட்டதாலோ அல்லது கொசுவர்த்தி சுருள் வாயிலாகவோ வீடு தீப்பிடித்து, அதில் சிக்கி அவர் இறந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி