உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நீதிபதி வீட்டில் பாதுகாப்பு வாபஸ் எதிர்த்து வழக்கு

நீதிபதி வீட்டில் பாதுகாப்பு வாபஸ் எதிர்த்து வழக்கு

சென்னை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வு முன், நேற்று காலை, வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி, முறையிட்டார்.அப்போது, ''ஆணைய தலைவர் நீதிபதி எஸ்.மணிக்குமாரின் வீட்டுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை, முன்னறிவிப்பின்றி அரசு திரும்ப பெற்றுள்ளது.''கடந்த வாரத்தில் மட்டும் மூன்று முறை பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டு, பின் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்,'' என்றார்.இதையடுத்து, தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுப்பது தொடர்பான குழுவிடம் மனு அளிக்கும்படி, வழக்கறிஞர் கே.பாலுவுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை